-
-
பிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்
November 27, 2009திருடுதல்
November 23, 2009
கிச்சடி – 19/11/09
November 18, 2009
சிறுகதை – கல்யாணம்
November 6, 2009டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.
( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )
சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்
November 6, 2009ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை – 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்
http://blog.mohandoss.com/2009/05/3.html
கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
என்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.
1) சச்சின் – 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.
2) சச்சின் – 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.
3) சச்சின் – 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
4) சச்சின் – 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் !
5) சச்சின் – 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.
6) சச்சின் – 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
7) சச்சின் – 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.
8) சச்சின் – 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.
9) சச்சின் – 101. சவுரவ் – 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.
10) சச்சின் – 100. இர்பான் பதான் – 65. டோனி – 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.
11) சச்சின் – 100. இந்திய அணி – 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.
சச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.
மிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும் 4) பார்க்கவும்.
கிச்சடி – 04/11/09
November 4, 2009கடைசியில் ஒரு திருப்பம் (சர்வேசன் 500 நச்ன்னு ஒரு கதை 2009 போட்டிக்காக)
October 26, 2009மிருதுளாவின் நாட்குறிப்புக்கள் – சிறுகதை
October 19, 2009கிச்சடி – 16 அக்டோபர்
October 16, 2009போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே – நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.
இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.
சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
“இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com“
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.
அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். “அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ” – அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.
World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?
WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் “//” சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !
எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.
எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும்
– எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.
மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் “புனிதப்போர்” வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.