உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings – பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?
சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.
வலையில் சும்மா மேய்ந்தபொழுது “மூணார்” என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது “தேவேந்திரன்”. இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?
புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?
ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய “தி லாஸ்ட் வேர்ல்ட்” படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் – திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)
பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.
முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் “இலக்கிய இதழ்” தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.
வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.
கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்
இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?
ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.
நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?
writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல “நானே” என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?
ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது “நாகரீகம்” என்பதற்கு சரியான தமிழ் சொல் “சால்பு” என்று கூறினர். சரியா ?
Advertisement