Archive for the ‘ரிக்கி பாண்டிங்’ Category

ரிக்கி பாண்டிங்கின் கேட்ச் ஒப்பந்தம்

October 2, 2008

இந்திய – அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்த அமெரிக்கன் செனட் நேத்திக்கு pass பண்ணிட்டாங்க. இத கேள்விப்பட்ட பாண்டிங் சிட்னி மேட்ச் முடிஞ்ச உடன தூக்கி குப்பைல போட்ட கேட்ச் ஒப்பந்தத்த மறுபடியும் கொண்டு வரணும்ன்னு ஒத்த கால்ல நிக்கறான்.

contentious காட்ச்ல Fielder சொல்றத கேட்டுட்டு பேட்ஸ்மேன் பெவிலியன் போயடனும்ன்னு அப்படிங்கறது தான் இந்த ஒப்பந்தத்தோட சாராம்சம். கீழ உள்ள படத்த பாருங்க. சிட்னீல நடந்த மேட்ச்ல பாண்டிங் கேட்ச் புடிச்சு கிளைம் பண்ணின லட்சணம். நம்ப ஆளுங்களும் ஒன்னும் லேசு பட்டவனுங்க இல்ல.

இது எல்லாம் பாக்கரதுக்கு தான் அம்பயர் நிக்கறான். (Rudi koertzen கிட்ட யாராவது ஞாபகப்படுத்தனும்). இந்த மாதிரி காட்சுக்கு 3rd அம்பயர் கூப்பிடரத பத்தி வேணும்னா ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம். அத விட்டுட்டு !

எனக்கு ரொம்ப புடிச்ச விக்கெட் கீப்பர் லதீப். அவன் one pitch கேட்ச் கிளைம் பண்ணினானு 5 மேட்ச் ban பண்ணினாங்க. (அதோட அவன் career முடிஞ்சு போச்சு ) Ban பண்ணின மேட்ச் ரெபிரீ மைக் ப்ராக்டேர். அவரே தான் சிட்னி மேட்ச்ளையும் refree. ஆனா இந்த சீரியஸ்க்கு refree பிராடு (fraud இல்ல Broad)

ஹர்பஜன் சிங்க் Vs ரிக்கி பாண்டிங்

October 1, 2008

இந்த தொடர்ல ரொம்ப எதிர்பார்க்கபடற tussle ஹர்பஜன் சிங்கோட பவுலிங்க ரிக்கி பாண்டிங் எப்படி விளையாடுவாருன்னு தான்.

ஒரு பத்து பன்னண்டு வருஷம் முன்னாடி ஆஸ்திரேலியாவோட அப்கமிங் பேட்ஸ்மேனா கிரேக் ப்ளுவெட் (Greg Blewett !) இருந்தாரு. இவரோட strokes எல்லாம் பாக்கறதுக்கு பயங்கர ஸ்டைலிஷா இருக்கும் . ஆனா பாவம் MUSHTAQ AHMED போடற கூக்லிய சுத்தமா பிக் பண்ண தெரியாம தெனருவாறு. பேட்ட தூக்கிகிட்டு கால வச்சி குச்சிய மறைச்சிகிட்டு கும்மி அடிப்பாரு. ஆனா பந்து நேரா போய் குச்சிய பேத்துடும்.

ஒரு மேட்ச்ல லுஞ்சுக்கு ஒரு ஓவர் இருக்கும். Blewett Batting. உடனே முஷ்ட்டாக் பந்த தூக்கிட்டு வருவாரு. (பவுலர் எல்லாருமே ப்ரீயா கிடைச்சா பினாயில் குடிக்கற கூட்டம்.)

பஸ்ட் பால் – blewett கூக்லி எதிர்பார்த்து விளையாடுவாரு. ஆனா proper leg break வரும். எப்படியோ சமாளிச்சுடுவாரு.

செகண்ட் பால் – கூக்லி தான் – இதோட கோவிந்தானு Blewettoda புட் வொர்க் இருக்கும். ஆனா again proper leg break.

மூணாவது பால் – நீ என்னடா நாயே கூக்லி போடறதுன்னு லெக் பிரேக்லயே ஸ்லிப் கேட்ச் கொடுத்து பன்னு சாப்பிட எல்லாரையும் அழைச்சிகிட்டு பெவிலியன் போய்டுவாரு.

அந்த சீரியஸ் முடிஞ்ச உடன அவருக்கு பதிலா தான் ரிக்கி பாண்டிங் டீமுக்கு வந்தாரு.

பெங்களூர்ல பாண்டிங் செட் தோசா சாப்பிட எல்லாரையும் அழைச்சிக்கிட்டு பெவிலியன் திரும்புவாரா ? (இல்லாட்டி ஏற்கனவே 2001ல ப்ரீ லஞ்ச் நெறைய கொடுத்துட்டேன்னு விட்டுடுவாரா) .

அக்டோபர் ஒம்பதாம் தேதியோ இல்லாட்டி பத்தாம் தேதியோ பதில் தெரியும். பாக்கலாம்.